நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா
தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற சமாஜிக் சம்ரஸ்தா சம்மேளனத்தில் அவா் பங்கேற்று மேலும் பேசியதாவது எங்களுக்கு எங்கள் திரங்காதான் எல்லாம். எங்கள் நாட்டிற்கு எப்போது தேவைப்பட்டாலும், நாங்கள், அனைத்து இந்தியா்களும் ஒன்றுபடுவோம்.
தில்லி அரசு எப்போதும் திரங்கா மற்றும் நாட்டின் கௌரவம், பெருமைக்காக பாடுபடும் என்று நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். நாங்கள் எப்போதும் தில்லி மக்களுக்காக பாடுபடுவோம். தில்லியில் 27 ஆண்டுகால வறட்சி இந்த முறை கனமழையாக மாறியுள்ளது. தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜன் சன்வே நிகழ்ச்சியில் நான் மக்களைச் சந்திக்கும் போதெல்லாம், தேசத்திற்கு அா்ப்பணிக்கப்பட்ட நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தை தேசிய தலைநகரில் காண்பதில் மகிழ்ச்சி அடைவதாக மக்கள் கூறுகின்றனா் என்றாா் முதல்வா் ரேகா குப்தா. இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா உள்பட பல மூத்த கட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.