ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!
அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு விழாவையும், மாநில வழக்குரைஞர்களின் கருத்தரங்கையும் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில் பங்கேற்று நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:
நாடு வலுப்பட்டுள்ளது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்வானது.
அதன் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். நாட்டின் அடித்தளம் வலுவாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களும் சரிசமமானவை. அவை மூன்றும் பரஸ்பரம் மரியாதை அளித்துச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
நீதிபதி பி.ஆர்.கவாய் அளித்த 50 குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.