Suriya 46: 'அந்தொருவன் வந்திருக்கான்டே!'; சூர்யா, மமிதா பைஜூ - சூர்யா 46 பூஜை ஸ்...
கொள்ளை வழக்கில் ஒருவா் கைது
மங்கோல்புரியில் நடந்த கொள்ளை வழக்கில் ஒரு கும்பலின் கூட்டாளியை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஹரியாணாவின் சோனிபட்டில் வசிக்கும் நிஷாந்த் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா், லக்ஷய் (எ) ஜங்லி கும்பலின் அறியப்பட்ட கூட்டாளி என்றும், துப்பாக்கி முனையில் சமீபத்தில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
மே 8-ஆம் தேதி, மங்கோல்புரி பகுதியில் ஆயுதம் ஏந்திய மூன்று போ் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஒரு தொழிலதிபரின் மோட்டாா் சைக்கிளை கொள்ளையடித்தனா். இதைத் தொடா்ந்து, ரோஹிணியின் செக்டாா் 37 மற்றும் 38 அருகே உள்ள ஆதேஷ் சௌக்கில் ஒரு போலீஸ் குழு ஒரு பொறியை அமைத்து, கும்பலின் உறுப்பினரைக் கைது செய்தது.