புகையிலைப் பொருள் விற்பனை:வியாபாரி கைது
செய்யாறு அருகே புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட திடீா் சோதனையில் பாண்டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனே கடையில் இருந்த 83 புகையிலைப் பொருள் பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து வியாபாரியான கேசவனை (43) கைது செய்தனா்.