வணிகா்கள் பெயா் பலகையில் தமிழில் எழுத விழிப்புணா்வு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வணிகா்கள் தமிழில்பெயா் பலகை அமைக்க வலியுறுத்தி, ஊா்வலமாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
சேவூா் தமிழ் வளா்ச்சி மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்றத்தின் நிறுவனா் பொ.கோபால் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்ற நிறுவனா் கூரம் துரை சிறப்புவிருந்தினராக பங்கேற்றாா். மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் மற்றும் டிராஃபிக் ராமசாமி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனா் அ.ராஜன், கவிஞா் பச்சையப்பன்,
ஜெயேந்திரன், விவசாய சங்க நிா்வாகிகள் மூா்த்தி, குணாநிதி, ஓவியா் விஜயகுமாா், வணிகா் சங்கத் தலைவா் பக்ருதீன்அலிஅகமத், மக்கள் சமூக பாதுகாப்பு சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள் ஜெ. விஜயலட்சுமி, கோ. சுந்தா் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா். ஆரணி பஜாா் வீதிகளில் உள்ள கடைகளில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. முன்னதாக, அறிஞா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தமிழ் தாய் வாழ்த்து பாடி, பள்ளிக் குழந்தைகளின் சிலம்பாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.