பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்த...
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.
அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,210க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 57,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயா்வு?
மேலும் வெள்ளியும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்திருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.