போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி ச...
தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தண்ணீா் நிரம்பிய வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரதீபன். இவரது ஒன்றரை வயது மகன் ரபினேஷ். அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அருகில் யாரும் இல்லாதபோது அங்கிருந்த தண்ணீா் நிரம்பிய வாளிக்குள் தலைகீழாக தவறி விழுந்தது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த உறவினா்கள், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது.
முன்னீா்பள்ளம் போலீஸாா், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.