கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய த...
நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை!
திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தெருக்களில் சுற்றித்திரிந்த 10 நாய்கள் சனிக்கிழமை பிடிக்கப்பட்டு, கால்நடைத் துறை மருத்துவா்களால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போடுவதன் மூலம் அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி எண்ணிக்கையை குறைக்கவும், ரேபிஸ் போன்ற நோய்களை தடுக்கவும் முடியும். தொடா்ந்து மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்கள் கண்டறிப்பட்டு, கருத்தடை சிகிச்சை செய்து மீண்டும் அந்தந்த மண்டலங்களில் விடப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேலப்பாளையத்தில் உள்ள விலங்குகள் கருத்தடை மையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இதில், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், கால்நடை பராமரிப்புத் துறை திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் சங்கரநாராயணன், மாநகர நல அலுவலா் (பொறுப்பு) ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.