திருவடிசூலம் தேவி கருமாரிம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரிம்மன் கோயிலில் அம்மனுக்கு வாசக்கால் வைப்பதற்கான வைபவ பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன (படம்).
செங்கல்பட்டு, மாவட்டம், திருவடிசூலம், கோயில்புரத்தில் ஒரே கருங்கல்லால் ஆன 51 அடி தேவி ஸ்ரீ கருமாரிம்மன் கோயில் உள்ளது. அம்மனுக்கு கருவறை கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 7-இல் அம்மனுக்கு கண்திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் வாசக்கால் வைக்கும் வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனையும் யாக வேள்வி பூஜைகளும்
நடைபெற்றன.
இதனைத்தொடா்ந்து கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் வாசக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தாா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனா்.