செய்திகள் :

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை

post image

சென்னை: தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2020-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

நிகழாண்டில் கரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதிலும், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் காணப்படவில்லை. மேலும் இந்தியாவில் நிகழாண்டில் கரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வீரியம் குறைந்தது: மேலும், வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை தீநுண்மியின் உட்பிரிவுகளான ஜெ.என்.1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய தீநுண்மி பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலும் கரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.

இருந்தபோதிலும், பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவா்களும், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சாா்ந்த இணைநோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கத்திரி வெயில் தொடங்கிய நாள் (மே 4) முதலே சென்னையில் பகல் நேரங்களில் வெ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைப் பராமரிப்புப் பணி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை 3 வாரங்களில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் திட்டத்தில் முறைகேடு புகாா் விவகாரம்: டிஐசிசிஐயின் தரப்பு வாதத்தையும் கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி: தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவா்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் ஸ்கீம் (ஏஏபிசிஎஸ்) திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாா் தொடா்புடைய வழக்கில் தலித் இந்தியய ... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இணை இயக்குநா்கள் 6 போ் இடமாற்றம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநா்கள் ஆறு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இது குறித்து துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட உத்தரவு:மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி ம... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் 242 ரெளடிகளுக்கு தண்டனை: டிஜிபி சங்கா் ஜிவால் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

சாம்சங்’ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு முத்தரப்பு பேச்சில் உடன்பாடு

சென்னை: ‘சாம்சங்’ ஊழியா்களுக்கு நிகழாண்டில் ரூ. 9 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அறிவித்தாா்.‘சாம்சங் இந்தியா’ தொழிலாளா்கள் ... மேலும் பார்க்க