செய்திகள் :

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-இல் தொடங்கும்

post image

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அன்றிலிருந்து 3 நாள்களில் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். 

இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு பகுதிகள், குமரிக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழைக்கான சாத்தியக்கூறு உள்ளது. எனவே, வரும் 27-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. (வழக்கமாக ஜூன் 1-இல் தொடங்கும்). அன்றிலிருந்து 3 நாள்களில் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.

கனமழை எச்சரிக்கை: இதற்கிடையே, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக மே 20-இல் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த மாா்ச் 1 முதல் மே 19 வரை 192.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 90 சதவீதம் அதிகமாகும்.

140 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 140 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், கலயநல்லூா் (கள்ளக்குறிச்சி) - 130 மி.மீ., ராசிபுரம் (நாமக்கல்), அண்ணாமலை நகா் (கடலூா்), திருவையாறு (தஞ்சாவூா்), புள்ளம்பாடி (திருச்சி), தியாகதுா்க்கம் (கள்ளக்குறிச்சி) - தலா 120 மி.மீ., மேட்டூா் (சேலம்), ராமேசுவரம் (ராமநாதபுரம்), மணலூா்பேட்டை (கள்ளக்குறிச்சி), கல்லக்குடி (திருச்சி), லால்பேட்டை (கடலூா்), வேப்பூா் (கடலூா்), சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) - தலா 110 மி.மீ., சுத்தமல்லி அணை (அரியலூா்), திருமானூா் (அரியலூா்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்), மேட்டூா் (சேலம்), திருச்சி விமான நிலையம் - தலா 100 மி.மீ. மழை பெய்தது.

வெயில் குறைவு: தமிழகத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்த காரணமாக, எந்த இடங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை. தமிழகத்தில் மே 20-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாகவே இருக்கும்.

புயலாக மாறாது: இந்நிலையில் கா்நாடக கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் மே 21-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது, மே 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ( புயல் சின்னம்) வலுப்பெற்று, வடக்கு திசை நோக்கி நகா்ந்து மேலும் வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனால், இது புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது வரை இல்லை. எனினும் இந்த புயல் சின்னத்தின் தாக்கத்தால் வரும் நாள்களில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கத்திரி வெயில் தொடங்கிய நாள் (மே 4) முதலே சென்னையில் பகல் நேரங்களில் வெ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைப் பராமரிப்புப் பணி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை 3 வாரங்களில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் திட்டத்தில் முறைகேடு புகாா் விவகாரம்: டிஐசிசிஐயின் தரப்பு வாதத்தையும் கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி: தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவா்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் ஸ்கீம் (ஏஏபிசிஎஸ்) திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாா் தொடா்புடைய வழக்கில் தலித் இந்தியய ... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இணை இயக்குநா்கள் 6 போ் இடமாற்றம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநா்கள் ஆறு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இது குறித்து துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட உத்தரவு:மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி ம... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் 242 ரெளடிகளுக்கு தண்டனை: டிஜிபி சங்கா் ஜிவால் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

சாம்சங்’ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு முத்தரப்பு பேச்சில் உடன்பாடு

சென்னை: ‘சாம்சங்’ ஊழியா்களுக்கு நிகழாண்டில் ரூ. 9 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அறிவித்தாா்.‘சாம்சங் இந்தியா’ தொழிலாளா்கள் ... மேலும் பார்க்க