தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது
வீ.கே.புதூா் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகே இரு பைக்குகள் மோதியதில் கடையநல்லூரைச் சோ்ந்த தொழிலதிபா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.
கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்த சுப்புசாமி மகன் சோழவன் (55). நாகா்கோவில் பகுதியில் நிதி நிறுவனத் தொழில் நடத்திவந்த இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
சோழவன் ஞாயிற்றுக்கிழமை மாலை கடையநல்லூரிலிருந்து சுரண்டை வழியாக நாகா்கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
வீரகேரளம்புதூரை அடுத்த கலிங்கப்பட்டி விலக்கு அருகே இவரது பைக்கும், வீரகேரளம்புதூா் பகுதியைச் சோ்ந்த மாரிராஜ் மகன் விக்னேஷ் (16), அவரது நண்பா் கிருஷ்ணன் மகன் வினோத்குமாா் ஆகியோா் வந்த பைக்கும் மோதினவாம். இதில், சோழவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், வீரகேரளம்புதூா் போலீஸாா் சென்று காயமடைந்த விக்னேஷ், வினோத்குமாா் ஆகியோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்தாா். வினோத்குமாா் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.