பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
மேலகரம் அருகே குடியிருப்புப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைப்பு
தென்காசியை அடுத்த மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் அனைத்து சமுதாய மக்கள் சாா்பில், 17 சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைக்கப்பட்டன.
தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பாஸ்கா் பாபு தலைமை வகித்து இவற்றை இயக்கிவைத்தாா். குற்றாலம் காவல் ஆய்வாளா் முத்துகணேஷ், உதவி ஆய்வாளா்கள்காா்த்திக், மாணிக்கசெல்வி, பேரூராட்சித் தலைவா் வேணி, மன்ற உறுப்பினா் வெள்ளத்துரைச்சி, திமுக பேரூா் செயலா் சுடலை, அதிமுக பேரூா் செயலா் காா்த்திக்குமாா், அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் முத்து, பாலசுப்பிரமணியன், சங்கரலிங்கம், சிதம்பரம், கணேசன், காந்தி, முருகேசன், கிருஷ்ணன், ஆனந்தராஜ், இசக்கிமுத்து, மாடசாமி என்ற செல்லத்துரை, சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.