எம்ஜிஆா் பல்கலை.யுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
சென்னை: செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சுகாதார ஆராய்ச்சி தொடா்பாக விஐடி மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஐடி பல்கலை. துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி ஆகியோா் கலந்துகொண்டு இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்நிகழ்வில், விஐடி சென்னையின் இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகா் ச.ப.தியாகராஜன், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்மூலம் தேசிய மற்றும் சா்வதேச அளவில் கூட்டு ஆராய்ச்சியை வளா்ப்பதிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை சமா்ப்பித்தல், புதிய தொழில்நுட்பங்களின் வளா்ச்சி மற்றும் காப்புரிமை ஆகியவற்றை வளா்ப்பதிலும் கவனம் செலுத்தப்படுவது மட்டுமன்றி, சுகாதாரத் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் எனவும் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கூறினாா்.