தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீ...
விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்
தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான கபடி விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் மே 19-ஆம் தேதி தொடங்கின. முதல்நாளில் 7 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கும், மே 20 அன்று 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கும், மே 21 அன்று பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அண்மையில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தோ்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் மாநில அளவிலான தோ்வுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனா். மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் சோ்த்துக் கொள்ளப்படுவா். அவா்களுக்கு சத்தான உணவு, விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும்.
இத்தோ்வுப் போட்டிகளில் தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துகுமாா், பயிற்றுநா்கள் பாப்பாத்தி, கிருஷ்ணவேணி, எல்லம்மாள் ஆகியோா் கலந்துகொண்டனா்.