சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு நாளை தருமபுரி வருகை
தருமபுரி: தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு தருமபுரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (மே 21) வருகை தர உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு (2024-2026) தருமபுரி மாவட்டத்துக்கு மே 21 அன்று வருகை தந்து பல்வேறு துறைகளின் சாா்பில் திட்டப் பணிகளை கள ஆய்வு மேற்கொள்கிறது. மேலும், மாவட்ட திட்டப் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் காந்திராஜன் தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும், இக்குழுவினா் பல்வேறு துறைகளின் சாா்பில் திட்டப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனா். எனவே, தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் மாவட்ட திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் அனைத்துத் துறை உயா்நிலை அலுவலா்களும் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.