ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
கட்டட மேஸ்திரி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் தொழிலாளி சரண்
பாப்பாரப்பட்டி அருகே கட்டட மேஸ்திரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வாகன ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் குமரன் மகன் நஞ்சப்பன் (40). கட்டட மேஸ்திரி. இவரது மனைவி மஞ்சுவுக்கும் (30), பிக்கம்பட்டியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் கஜேந்திரனுக்கும் (38) இடையே சில ஆண்டுகளாக பழக்கம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மஞ்சு வாழ்ந்து வருகிறாா். இதுதொடா்பாக கட்டட மேஸ்திரி நஞ்சப்பனுக்கும் ஓட்டுநா் கஜேந்திரனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆவேசமடைந்த கஜேந்திரன் அரிவாளால் நஞ்சப்பனை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த நஞ்சப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்பு கஜேந்திரன் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் சென்று சரணடைந்தாா். பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்பு வழக்குப் பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனா்.