செய்திகள் :

ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை

post image

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பாலக்கோடு வனச்சரக எல்லை பகுதியில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை ஜோதிஅள்ளி, வட்டக்கானாம்பட்டி, குண்டன் கொட்டாய், மேல் மாரியம்மன் கோயில், ஐயா் கொட்டாய், பட்டா்அள்ளி, கவுண்டனூா் பகுதியில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனா்.

மேலும், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும், நாய், கோழி, ஆடு, மாடுகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் வனத் துறையினா் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீா்: பெயரளவில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதால் வடிகால் வசதியுடன் பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மத... மேலும் பார்க்க

கட்டட மேஸ்திரி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் தொழிலாளி சரண்

பாப்பாரப்பட்டி அருகே கட்டட மேஸ்திரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வாகன ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 338 மி.மீ. மழை

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 338 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தற்போது வெயில் தணிந்து கடந்த சில நாள்களாக தொ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல் அருவியில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கோடை விடுமுறையைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தருமபுரி மா... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான கடனுதவி திட்டங்களைப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சிறு... மேலும் பார்க்க