பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
மைலம்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு
மைலம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
கரூா் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்துள்ள மைலம்பட்டியில் கரூா் வையம்பட்டி சாலையில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து தாா்சாலை அமைத்திருந்ததை அதிகாரிகள் அண்மையில் கண்டறிந்தனா்.
இதையடுத்து திங்கள்கிழமை கரூா் கோட்டப்பொறியாளா் ரவிக்குமாா் தலைமையில், உதவி கோட்டப்பொறியாளா் கா்ணன், தரகம்பட்டி உதவிப்பொறியாளா் கோகுல்நாத் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தாா்சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி மீட்டனா்.