வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!
'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்
‘அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்’ என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார்.
இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், “திமுக-வுக்கு எது எதிர்க்கட்சி. அதிமுக எதிர்க்கட்சியா? திமுக ஒரு கொள்கை வைத்து இருக்கிறது.

ஊழல், லஞ்சம், கொள்ளை, மணல் கொள்ளை எல்லாம் இந்த ஆட்சியிலும் நடக்கிறது. அதிமுக ஆட்சியிலும் நடந்தது. எந்த வேறுபாடும் இல்லை.
இவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். அவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். இவர்களும் இலவசம் அறிவிப்பார்கள். அவர்களும் இலவசம் அறிவிப்பார்கள்.
அதேபோல பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது? கொடிகள் வெவ்வேறாக இருக்கிறது. கொள்கையில் வேறுபாடு இருக்கிறதா?
3 ஆண்டுகளாக நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர் இப்போது செல்வது ஏன்? அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள். இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இந்த நாட்டை நிர்வாகம் செய்வது, சட்டசபை, பார்லிமென்டா? அல்லது நீதிமன்றமா என்ற கேள்வி எழுகிறது. எல்லா முடிவுகளையும் நீதிமன்றம் எடுத்தால், சட்டசபை, பார்லிமென்ட் தேவையில்லை. அதனை கலைத்து விடலாம்” என்று விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs