செய்திகள் :

உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் - `மைசூர் ஸ்ரீ’ எனப் பெயர் மாற்றம்! ஏன்?

post image

இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் மீது இந்தியர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் இனிப்பகத்தில் மைசூர் பாக், கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் முதலான இனிப்புகளின் பெயர்களை மைசூர் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ என்று கடை நிர்வாகம் மாற்றிவிட்டது.

இதன் காரணம் என்னவென்று கேட்டால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்காவும்தான் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பெயர்களில் பாக். என்று இருப்பதால், அதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை என்றும் தெரிவித்தனர்.

இதனால்தான், பெயர்களில் இருந்த `பாக்’ என்றிருந்தை மாற்றி விட்டதாகக் கூறினர்.

வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

ஹரியாணா மாநிலத்தில் புதியதாக 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஹரியாணாவின் குருகிராமம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்றுபட... மேலும் பார்க்க

கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ... மேலும் பார்க்க

உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள்... மேலும் பார்க்க

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 1... மேலும் பார்க்க