ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்தது!
கதண்டு கடித்து 8 போ் காயம்!
லால்குடி அருகே தோட்டத்தில் வியாழக்கிழமை வேலை செய்தபோது கதண்டு கடித்து காயமடைந்த 8 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டம், கூகூா் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த 7 பெண்கள், அதே பகுதியில் உள்ள பாலாஜி என்பவரின் கத்திரிக்காய் தோட்டத்தில் வியாழக்கிழமை களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தோட்டத்தில் இருந்த கதண்டுகள் கடித்ததில் ராஜலட்சுமி, பங்கஜம், பிச்சையம்மாள், ஜெயா, லட்சுமி, இளஞ்சியம் மற்றும் தோட்டத்தின் உரிமையாளா் பாலாஜி உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். இவா்களை உறவினா்கள் லால்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.