இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!
GT vs LSG: "பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" - ஆட்ட நாயகன் மார்ஷ்
நடப்பு ஐ.பி.எல் சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தும், 7-வது இடத்தில் இருக்கும் லக்னோவும் அகமதாபாத்தில் நேற்று (மே 22) களமிறங்கின.
குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரானின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து சேஸிங் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே குவித்ததால், 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிபெற்றது.
சதமடித்த மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஏமாற்றமளிக்கிறது
வெற்றிக்குப் பிறகு பேசிய ஆட்ட நாயகன் மார்ஷ், "முதன்முதலில் 2010-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடினேன். இடையில் சில காலம் காணாமல் போய்விட்டேன்.
கொஞ்ச காலம் ஆகிவிட்டது. இப்போது தொடக்க வீரராக ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மார்க்ரமுடனான பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது.
பவர்பிளேயில் அவர்கள் நன்றாக பந்துவீசினார்கள். பவர்பிளேயில் நீங்கள் 12 பந்துகளில் 12 ரன்கள்தான் என்றால் அது சற்று மோசமான சூழ்நிலைதான்.

இருப்பினும், ஒரு சில நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்ததும் அது எங்களுக்கான விஷயங்களை எளிதாக்கியது.
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நெருக்கமான போட்டிகளை தவறவிட்டோம். அதனால், பிளேஆஃப்-கான ரேஸிலிருந்து வெளியேறிவிட்டோம்.
ஒரு குறிப்பிட்ட எந்த அணி எந்த அணியையும் வெல்லலாம். அதனால்தான் இது உலகின் சிறந்த போட்டி." என்று கூறினார்.