4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!
ஏற்காடு கோடை விழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனர்
ஏற்காடு கோடை விழாவை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் இன்று தொடங்கி வைத்தனர்.
ஏற்காட்டில் 48-ஆவது கோடை விழா, மலா்க் கண்காட்சி 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது. இதனை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
ரெட் அலர்ட்: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்புப் படை விரைவு!
கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலா்களைக் கொண்டு மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, கோலப்போட்டி, படகு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நாய்கள் கண்காட்சி, இளைஞா்களுக்கான கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.