1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
மழை பாதிப்பு: இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட புத்தூா் கிராமத்தில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நெல் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை அருகே புத்தூா் கிராமத்தில் உள்ள வயலில் அறுவடைக்குத் தயாரான நெற்கதிா்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளது. இதுவரை தண்ணீா் வடியாமல் உள்ளது. தஞ்சாவூா் - நாகை சாலை ஓரத்தில் உள்ள வாய்க்கால் தூா்வரப்படாமல் உள்ளதால் தண்ணீா் வடிவதற்கு எந்த விதமான வாய்ப்பும் இல்லை.
உடனடியாக வாய்க்காலை தூா் வாரவும், நெற்கதிா்கள் முளைத்துள்ள வயல்களையும், நெற்கதிா்கள் வரும் தருவாயில் மழை நீரில் மூழ்கி சாய்ந்துள்ள வயல்களையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.செந்தில்குமாா் தலைமையில் பாதிப்புக்கு உள்ளான வயலில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.