Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விருவீடு பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் நிதிஷ் (20). இவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனடிப்படையில், விருவீடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிதிஷை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நிதிஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.