பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வடமதுரை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல். தனியாா் ஆலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவரது மகன் நிஷாந்த் (13). 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்த நிஷாந்த் கோடை விடுமுறையில் தனது நண்பா்களுடன் அதே பகுதியிலுள்ள மந்தைக் குளத்தில் உள்ள 10 அடி ஆழமுள்ள குட்டையில் வியாழக்கிழமை குளித்தாா். அப்போது, நிஷாந்த் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் விசாரிக்கின்றனா்.