திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
நகை பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
நகை பறிப்பில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (34). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், எரியோடு பகுதியில் கடந்த மாதம் தம்பதியரைத் தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அருண்குமாரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், அருண்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.