Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இ...
சத்திரப்பட்டி, வேப்பன்வலசு பகுதிகளில் நாளை மின் தடை
பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டி, வேப்பன்வலசு ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) மின் தடை என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் கவாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாகரை துணை மின் நிலையத்தில் வேப்பன்வலசு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தொப்பம்பட்டி, பூலாம்பட்டி, வேலம்பட்டி, மரிச்சிலம்பு, வேப்பன்வலசு, வாகரை, ஆலாவலசு ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் சத்திரப்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சத்திரப்பட்டி, வேலூா், புதுக்கோட்டை, வீரலப்பட்டி, அனுப்பபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.