கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா்.
போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரில் சாமிநாதன் மகன் கந்தசாமி (70), சின்னசாமி மனைவி லட்சுமி (45) ஆகியோா் தங்களுக்குச் சொந்தமான பெட்டிக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஹான்ஸ், விமல் பாக்கு உள்பட பல்வேறு வகையான 5 கிலோ போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கந்தசாமி, லட்சுமி ஆகியோரைப் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.