பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்தியவா் கைது!
பெரம்பலூா் அருகே, அரசிடம் முறையான உரிமம் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தியவரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூா் கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் செயல்பட்டு வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பு ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா், அகரம் சீகூா் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே புதன்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கிழுமத்தூா் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜயகுமாா் (34) என்பவா், எவ்வித அரசு உரிமமும் பெறாமல், கீற்றுக் கொட்டகையில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தி, மது அருந்துபவா்களுக்குத் தேவையான தண்ணீா் பாக்கெட்டுகள், தின்பண்டங்களை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னா், விஜயகுமாரைக் கைது செய்த போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.