செய்திகள் :

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி

post image

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட அசூா் ஊராட்சியில், நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சித்துறை மூலம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியது:

குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவா்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு ஊரக வளா்ச்சி முகமை மூலமாக 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா், வேப்பந்தட்டை, ஆலத்தூா், வேப்பூா் ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கு 1,200 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 599 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சியுள்ள 601 வீடுகளின் பணிகள் நடைபெற்று வருகிறது.இதேபோல, 2025-26 ஆம் நிதியாண்டுக்கு 4 ஒன்றியங்களிலும் 1,200 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 2,400 வீடுகள் கட்ட தலா ரூ.3 .50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் சின்னதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவழகன், சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க

பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க

வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்தியவா் கைது!

பெரம்பலூா் அருகே, அரசிடம் முறையான உரிமம் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தியவரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா... மேலும் பார்க்க

வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிக்க எதிா்ப்பு தெரிவித்து புகாா்

பெரம்பலூா் அருகே திருவிழாவின்போது, வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒரு குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.இதுகுறித்து, பெரம்பலூா்... மேலும் பார்க்க

மே 27-இல் பில்லங்குளத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் மே 27- ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க