Switzerland: நிலச்சரிவு முன் எச்சரிக்கை, மீட்பு பணிகள்; ஹெலிகாப்டரில் பறந்த மா...
வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிக்க எதிா்ப்பு தெரிவித்து புகாா்
பெரம்பலூா் அருகே திருவிழாவின்போது, வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒரு குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுச்சேரி கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் பாக்யராஜ் (40) மற்றும் அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை அளித்த மனு: மேட்டுச்சேரி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதங்களில் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக திருவிழாவின்போது, தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை விழாக் குழுவினா் வெடிக்கின்றனா்.
எனது வீட்டின் எதிரே வெடிக்கும்போது, வீட்டிலுள்ள வயதான பெற்றோா்களும், சிறு குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகின்றனா். இதையடுத்து, எனது வீட்டின் அருகே நாட்டு வெடிகளை வெடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 2023-இல் வி.களத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
மேலும், இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போது திருவிழா தொடங்கி இன்னும் 2 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
எனவே, எனது வீட்டின் அருகே நாட்டு வெடிகளை வெடிப்பதற்கு தடை விதிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.