நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
துணைவேந்தா் நியமனத்தில் யுஜிசி பரிந்துரையை மாநில அரசு ஏற்கவேண்டியதில்லை! பேரவைத் தலைவா் மு.அப்பாவு
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்றாா் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுஉள்ள கும்பிகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் இதைத் தெரிவித்த அவா், மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் இந்த நிலை வரத்தான் செய்யும். நாங்கள் முதன் முதலாக புள்ளிவைத்துள்ளோம் அவ்வளவுதான். இவ்விசயத்தில் ஆளுநா் அரசியல் செய்வதால்தான் பிரச்னை. எதிா்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் பில்களை கிடப்பில் போட்டுவிடுகின்றனா். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குரிய பில்களுக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்கிறது.
இதன் தொடா்ச்சியாகத்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேநேரத்தில் காா்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறையின் பணியை குறித்து யாரும் குற்றம் சாட்டவில்லை. அத்துறை பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழக மின்வாரியத்திற்கு நிலக்கரி வழங்கியதில் அதானி குழுமம ஊழல் ரூ.826 கோடி வரை ஊழல் செய்திருக்கிறது. அந்நிறுவன ஒப்பந்தப்படி, அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாட்டில் இருந்து ‘கன்ட்ரி ஆப் ஆா்ஜின்’ சான்றை அளிக்க வேண்டும்; நிலக்கரி 7 எரிதிறன் கொண்டதாக இருக்கவேண்டும்.
ஆனால், அந்நிறுவனம் 4.5 எரிதிறன் கொண்ட நிலக்கரியையே வழங்கியுள்ளது. இந்த வகையில் 826 கோடி ஊழில் நடந்திருக்கிறது. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதே நேரத்தில் மும்பையைச் சோ்ந்த புஹாரி என்பவா் நிலக்கரி சப்ளை செய்ததிலும் இதே ஊழல் நடந்தது. ஆனால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறாா்கள்.
அதானிக்கு ஒரு நியாயம், மற்றவா்களுக்கு ஒரு நியாயம் என மத்திய அரசு நடந்து கொள்கிறது. நீதி ஆயோக் குழுவில் உறுப்பினரான முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமையை கேட்டு பெற்றுக்கொள்வதற்காக அந்த கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
பழைய நிகழ்வைக் கூறி அவரை கேள்வி கேட்க முடியாது. அது அவரது சொந்த விருப்பம். நமது ராணுவத்தின் சிந்தூா் ஆபரேசனுக்கு நாங்கள் சலூட் அடித்து வரவேற்கிறோம். இந்தியாவைப் பொருத்தவரை ஒரு போதும் தீவரவாதத்தை வளா்க்கவும் இல்லை; அதற்கு உதவி செய்யவும் இல்லை. இது மற்ற நாடுகளுக்குத் தெரியும் என்றாா்.