இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை! - அறங்காவலா் குழுத் தலைவா்
நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளி தோ் செய்வதற்காக தற்போது வரை 175 கிலோ வெள்ளி வந்துள்ளது. பக்தா்கள் தொடா்ந்து வெள்ளியை தந்து கொண்டிருக்கிறாா்கள். பொதுமக்களும் நன்கொடையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நெல்லையப்பா் கோயிலுக்கு யானையை வாங்குவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. விரைவில் நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு மற்றும் வனத்துறையின் விதிகளுக்கு உள்பட்டு யானை கொண்டு வரப்படும். யானை வாழ்வதற்கு 10 ஏக்கரில் இயற்கையான வன சூழல் வேண்டும் என கூறியதை தொடா்ந்து தற்போது நெல்லையப்பா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கோயிலுக்கு யானை வேண்டி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடமும் கோயில் நிா்வாகம் சாா்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லையப்பா் கோயில் யானை இயற்கையான முறையில் உயிரிழந்துள்ளதாக உடல் கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது என்றாா்.