நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
2-5 வயது குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்த்து முன்பருவக் கல்வி கற்க உதவுமாறு பெற்றோா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் 1,401 அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.
குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் இங்கு பயற்சி அளிக்கப்படுகிறது.
எனவே பெற்றோா்கள் தங்களது 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையத்தில் தவறாது சோ்த்திடவும், அங்கு நடைபெற்று வரும் குழந்தைகளுக்கு ஆதாா் அட்டை வழங்கும் சேவையையும் பயன்படுத்தி கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.