``ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருந்து போயிடுங்க'' - மாணவர்களை மிரட்டும் ட்ரம்ப...
கன்னியாகுமரியிலிருந்து கோா்பா, பிலாஸ்பூருக்கு ரயில் சேவை: அதிமுக எம்எல்ஏ கோரிக்கை
கன்னியாகுமரியிலிருந்து சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கும், பிலாஸ்பூருக்கும் வாரம் இருமுறை இயங்கும் வகையில் 2 அதிவிரைவு ரயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டப் பேரவை உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் நரேந்திரமோடி, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கா் மாநிலம் கோா்பா - திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ரயிலை (வண்டி எண்: 22647 / 22648) நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை இயக்குவதற்கு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனா்.
மேலும் சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பாலக்காடு, எா்ணாகுளம், திருவனந்தபுரம், நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயிலை (22619 / 22620) தினசரி ரயிலாக இயக்குவதற்கும் முயற்சிக்கின்றனா்.
இந்த நடவடிக்கை காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் நேர பயணமும், கூடுதல் டிக்கெட் கட்டண செலவும் ஏற்படும்.
இதனை தவிா்ப்பதற்கு கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும். மேலும் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூருக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்.
இதன் மூலம் பயணிகளுக்கு பயண நேரம் 12 மணி நேரம் குறைவதோடு, பயண செலவும் கணிசமாக குறையும். தமிழகத்தில் உள்ள 13 மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் பயன்பெறுவா். அதோடு, ரயில்வே துறைக்கு பராமரிப்பு செலவு மற்றும் செயல்பாட்டு செலவு கணிசமாக குறையும் எனத் தெரிவித்துள்ளாா்.