வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: இன்று கால்நாட்டு விழா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகக் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ( மே 23) கால்நாட்டு விழா நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா இம்மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
இதைத்தொடா்ந்து தெற்கு ரத வீதியில் உள்ள கன்னியம்பலம் முன்பு கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெறும். மேலும், 1ஆம் நாள் திருவிழாவான மே 31ஆம் தேதி காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நிறைவடைந்ததும், கீழ ரத வீதியில் தோ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.