GT vs LSG : `பிளே ஆஃப்-க்குள் வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்' - தோல்விக...
வரதட்சிணை கொடுமை: 6 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே வரதட்சிணை கொடுமை புகாரில் கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளையைச் சோ்ந்தவா் சுபனேஷ் மகள் ஜென்ஸி (28). இவருக்கும் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ஸ்டாலின் (29) என்பவருக்கும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வரதட்சிணையாக வழங்கப்பட்டதாம்.
திருமணத்துக்குப் பின், கடை துவங்க வேண்டும் எனக் கூறி ரூ. 5 லட்சம் கூடுதல் வரதட்சிணை கேட்டு ஜென்ஸியை ஸ்டாலின் துன்புறுத்தினாராம். இதையடுத்து ரூ. 2 லட்சமும், மசில நாள்களுக்குப் பின் ரூ. 4.37 லட்சமும் பெண்ணின் குடும்பத்தினா் கொடுத்துள்ளனா். ஆனால் ஸ்டாலின் கடை ஆரம்பிக்காமல் ஜென்ஸியை வீட்டை விட்டு துரத்தினாராம்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜென்ஸி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஜென்ஸியின் கணவா் ஸ்டாலின், அவரது தந்தை பால்ராஜ், தாயாா் பேபி, சகோதரி ராணி, உறவினா்கள் லிட்டா, சிஞ்சு ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மகளிா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.