செய்திகள் :

BJP: "கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் நயினார் அப்படிச் சொல்கிறார்" - பிரேமலதா விஜயகாந்த் சொல்வது என்ன?

post image

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (மே 23) தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் மிகப்பெரிய மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து எல்லா முடிவுகளையும் அறிவிப்போம்,” என்று தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு, “தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தை லஞ்சமாகவோ, ஊழலாகவோ பயன்படுத்தினால், கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

கேப்டன் கூறியபடி, லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

நீட் தேர்வு, டாஸ்மாக் ஒழிப்பு, விலைவாசி குறைப்பு எனப் பல வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை,” என்று கூறினார்.

“இன்னும் தேர்தலுக்கு எட்டு, ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் அவர்கள் ஏதாவது செய்வார்களா என்று பார்ப்போம்.அப்படிச் செய்யவில்லை என்றால்,

மக்கள்தான் எஜமானர்கள்; 2026-ல் நல்ல தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினர் குறித்து பா.ஜ.க-வினர் விமர்சிக்கக் கூடாது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “கூட்டணி அமைத்த பிறகு, அதற்குள் சலசலப்பு வந்துவிட்டால், கூட்டணி பிரிய வாய்ப்புகள் உள்ளன.

அதனால், கருத்துகள் சொல்வதை அவர்கள் கட்டுப்படுத்துகின்றனர்,” என்று பதிலளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்

‘அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்’ என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர்... மேலும் பார்க்க

சிவகங்கை: கிளம்பிய எதிர்ப்பு; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர் - நடந்தது என்ன?

நாட்டார்களின் எதிர்ப்பால் நூல் வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பிச் சென்ற சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா அதிபரிடம் போலியான இனப்படுகொலை வீடியோவை காட்டினாரா ட்ரம்ப்? - வெடிக்கும் சர்ச்சை

'விளக்குகளை அணையுங்கள்' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகத்தின் விளக்குகள் அணைகிறது. அங்கே, கிட்டத்தட்ட நான்கு நிமிட வீடியோ ஓடுகிறது. அதில் 'எங்களுக்கு யார் அனுமதியும் தேவையில்... மேலும் பார்க்க

'கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடி; கொள்கை மாற்றத்தில் அரசாங்கம்!' - காரணம் என்ன?

வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் இந்திய மாணவர்களின் சாய்ஸ்களில் ஒன்று, 'கனடா'. ஆனால், கனடாவில் எடுக்கப்படும் கொள்கை மாற்றங்களால், 'இது இனி தொடருமா?' என்கிற சந்தேகம் எழுகிறது. ஏன்... என்ன ஆனது? மேலே கூறி... மேலும் பார்க்க

Sindoor: "கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?" - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (மே 22) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செ... மேலும் பார்க்க

'புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்'- எடப்பாடி வலியுறுத்தல்

வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க