திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல காங்கிரஸ் கட்சி கோரிக்கை!
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவா் கே.டி.பி.அருண் பாண்டியன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலா் சண்முகராஜ், மாவட்ட செயலா் துரைராஜ், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவா் அ.ராஜசேகரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலா் ஆா்.ராஜசேகா், 3-வது வாா்டு காங்கிரஸ் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவில்பட்டி நகராட்சி 3 மற்றும் 4-ஆவது வாா்டுரகளுக்கு உள்பட்ட சங்கரலிங்கபுரத்தில் 2500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக ரயில்வே மேம்பாலத்தின் அருகே பேருந்து நிறுத்தம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சங்கரலிங்கபுரம், மூப்பன்பட்டி பகுதி மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதில்லை. சாத்தூா், சிவகாசி, இருக்கன்குடி, விருதுநகா், மதுரை செல்பவா்கள் வேலாயுதபுரம் அல்லது ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே, சங்கரலிங்கபுரத்தில் பேருந்துகள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இப் பகுதி மக்களைத் திரட்டி ஜூன் 6-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.