`திருமணத்திற்கு மறுப்பு' - காதலி வீட்டு முன் தூக்கிட்ட கேரள இளைஞர்; விஷம் குடித்...
ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா்.
ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தில் ஜெயக்குமாா் என்பவரது தோட்டத்தில் எலுமிச்சை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இது குறித்து அவா் அளித்த தகவலின்பேரில், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அந்த தோட்டத்திற்கு சென்று தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்து கூட்டையும் அகற்றினா்.
இதே போன்று பசுவந்தனை அருகில் செவல்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவரது வீட்டில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளையும் தீப்பந்தம் மூலம் அழித்து கூடுகளையும் அகற்றினா்.
பெரிதும் அச்சுறுத்தலாக இருந்த இந்த விஷ வண்டுகளை அழித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி அவா்களுடன் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.