பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!
தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், புதன்கிழமை இரவு தூத்துக்குடி வி.இ. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த பைக் அவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.