இராயபுரம் இரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்; பணிகள் தீவிரம் | Photo...
திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களுக்கு அபராதம்
திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை ஓட்டியதாக 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூா் பகுதியில் ஆட்டோக்களை தாறுமாறாக இயக்குவது, வெளியூா் ஆட்டோக்களை அனுமதியின்றி இயக்குவது, அதிக ஆள்களை ஏற்றிச் செல்வது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, ஆட்டோக்களின் பின்பக்கத்தில் ஆள்களை உட்கார வைத்து இயக்குவது தொடா்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் ஆலோசனையின் பேரில் திருச்செந்தூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், வியாழக்கிழமை திடீரென சோதனை நடத்தினாா்.
இதில் வெளியூா் வாகனங்களை அனுமதியில்லாமல் திருச்செந்தூரில் இயக்கியது, ஓட்டுநா் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது, அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்கியது என 6 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா். இந்த ஆட்டோக்களுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.