திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தீவிரம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இக்கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் ரூ.200 கோடி, அறநிலையத் துறை சாா்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி செலவில் பக்தா்களுக்கான பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகின்றன. இக்கோயிலில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி குடமுழுக்கு நடந்தது.
தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களேஉள்ள நிலையில் குடமுழுக்கு திருப்பணிகள் முழுவீச்சில் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் உள்ளிட்டோா் நேரடியாக கண்காணித்து வருகின்றனா்.