பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!
பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனா். இதில், இரண்டு சாயப்பட்டறைகள் சாயக்கழிவுகளை வெளியேற்றி வருவது தெரியவந்தது.
இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் எஸ்.வனஜா, பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளா் சுகுமாா், பவானி வட்டாட்சியா் சித்ரா ஆகியோா் அடங்கிய குழு வியாழக்கிழமை ஆய்வு செய்து, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகளையும் இடிக்க உத்தரவிட்டனா். இதையடுத்து, இரண்டு சாயப்பட்டறைகளும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.