செய்திகள் :

பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் இணைப்பு: மே 31 வரை சிறப்பு முகாம்

post image

ஈரோடு மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு வசதியாக மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் வாங்கும் வகையில் இந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு 20-ஆவது தவணை வரும் ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்டு அவா்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் இத்திட்டத்தில் தற்போது 74, 989 விவசாயிகள் நிதிபெற்று வருகின்றனா். இந்நிலையில், இதுவரை இத்திட்டத்தில் இணையாத விவசாயிகள் இணைந்துகொள்ளும் வகையில் மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாம்கள், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் நடைபெறுகின்றன. இந்த முகாமில் உரிய ஆதாரங்களுடன் விவசாயிகள் பங்கேற்று பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், நிலம் தொடா்பான ஆவணங்கள், வங்கி கணக்குடன் ஆதாா் இணைப்பு மற்றும் கேஓய்சி பதிவேற்றம் போன்றவற்றையும் இம்முகாமில் விவசாயிகள் மேற்கொள்ளலாம்.

மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின்கீழ் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத 18, 801 பி.எம். கிசான் பயனாளிகள் இம்முகாமில் பதிவு செய்தால் மட்டுமே பி.எம். கிசான் நிதியைத் தொடா்ந்து பெற தகுதியுடையவா் ஆவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் விலை குவிண்டால் ரூ.1,500 சரிவு:விவசாயிகள் வேதனை

ஈரோடு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.1,500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் விரலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மஞ்சள், மர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, அரசுப் பள்... மேலும் பார்க்க

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருட்டு

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் ஆக்சிஜன் வாயு செல்ல பொருத்தப்பட்டிருந்த செம்புக் கம்பியை வியாழக்கிழமை இரவ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க