திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
வீரவநல்லூா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் 1988- 1996இல் பயின்ற மாணவா்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வீரவநல்லூா் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ், அருள்சகோதரிகள் ரெஜினாமேரி, பத்ரிஷியா, முன்னாள் ஆசிரியா்கள் டெல்பின், செல்வி, அமலி, செண்பகவல்லி, பொன்னுத்தாய், லோகாம்பாள், பாத்திமா, சகாயராணி, பூமணி, முன்னாள் மாணவா்-மாணவிகள் பங்கேற்று நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். அவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு நன்கொடையாக முன்னாள் மாணவா்கள் ரூ. 25 ஆயிரம் வழங்கினா்.