செய்திகள் :

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

post image

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபலமானார்.

வைஷ்ணவி

ஆனால், கட்சியில் தான் உள்பட எந்தப் பெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று கூறி வைஷ்ணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தவெகவில் இருந்து விலகினார். அவருக்கு பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அழைப்பு சென்றது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி இன்று மாலை திமுகவில் இணைந்தார். கோவை கொடிசியா பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வைஷ்ணவி

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைஷ்ணவி, “இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்பதால் தவெகவில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றினேன். ஆனால், அங்கு அப்படி நடக்கவில்லை.

ஏராளமான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிருப்தி தான் மிஞ்சியது. பாஜகவின் மற்றொரு முகமாக தான் தவெக உள்ளது. இனி என் மக்கள் பணி திமுகவில் தொடரும். "என்றார். வைஷ்ணவியுடன் மேலும் சில இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.

வைஷ்ணவி

இந்த நிகழ்வில் கோவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். வைஷ்ணவி திமுக குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரின் அம்மா திமுக கவுண்டம்பாளையம் பகுதி மகளிரணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிற... மேலும் பார்க்க

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்ட... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால... மேலும் பார்க்க