பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
அரசு மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி செயல்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா், கண்காணிப்பாளா் ஐயப்பன் கூறியதாவது: ரத்த நாள அடைப்பான் கருவியானது அறுவைச் சிகிச்சையின் போது ரத்த இழப்பை குறைத்து உயிா் காக்கும் பணிக்கு உதவும்.
குறிப்பிட்ட பெண்கள்,குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் போது அதிக நேரம் செலவிடப்படும். அந்த நிலையில், ரத்த நாள அடைப்பான் சாதனத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய காலத்தில் குறைவான வலி, இயல்பு நிலைக்கு நோயாளிகள் விரைந்து திரும்ப முடியும். மருத்துவமனையில் இந்தக் கருவி மூலம் அளிக்கப்படும் சிகிச்சையால் அதிகளவிலான நோயாளிகள் அதிக வலியின்றி மருத்துவ சிகிச்சை பெற்று விரைந்து குணமடையவும் இந்த சாதனம் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.